மீண்டும் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்…இளைஞரை 60 தடவை சுட்ட போலீஸ்…கறுப்பினத்தவருக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் வன்முறை
காவல்துறையினரால் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்தியாவில் சாதிய கொடுமை போல அமெரிக்காவில் இனவெறி பல நூற்றாண்டுகளாகவே பிரச்னையாக இருந்து வருகிறது. கறுப்பின மக்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, காவல்துறையினரால் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, போக்குவரத்து விதிகளை மீறியதாக ஜெய்லேண்ட் வாக்கர் என்ற கறுப்பினத்தவரை ஓஹியோ காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. இதை பார்த்த வழக்கழிஞர், வாக்கரை காவல்துறையினர் 60 சுட்டதாக திடுக்கிடும் தகவலை பகிர்ந்து உள்ளார்.
வாக்கரின் குடும்ப வழக்கறிஞர் பாபி டிசெல்லோ இதுகுறித்து விவரிக்கையில், “அந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. ஆறே வினாடிகளில், காவல்துறை அதிகாரியின் துப்பாக்கிகளில் இருந்து 90 தோட்டாக்கள் பொழிந்தன. பட்டாசு வெடிப்பது போல் இருந்தது. இது ஒரு கொடூரமான வீடியோவாக இருக்கும். இது ஒருவித பதற்றத்தை தூண்டும். மக்களை அசர வைக்கும்” என்றார்.
இந்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்களுக்கு காவல்துறையால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்ரான் காவல் துறை செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ” ஜூன் 28 ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு போக்குவரத்து விதிமீறலுக்காக 25 வயது வாக்கரை அதிகாரிகள் பிடிக்க முயன்றனர். வாக்கர் சரண் அடைய மறுத்து தனது வாகனத்தை ஓட்டிச் சென்றார். துரத்தி சென்று போது துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்தது எப்படித் தெரிந்தது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை. சம்பவத்தை குறித்து விவரித்த வழக்கழஞர் பாபி, “போலீஸ் ரேடியோவில் துப்பாக்கிச் சூட்டை கேட்ட பிறகும் அதிகாரி உணர்ச்சி வசப்படவில்லை. தொடர்ந்து, அவர்கள் வாகனத்தை ஓட்டு கொண்டு சென்றனர்.
வாக்கர் தனது துப்பாக்கியை அதிகாரிகளை நோக்கி காண்பித்ததற்கும் காரில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பித்ததற்கான ஆதாரத்தை சேகரிக்க முடியவில்லை. துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகும், வாக்கர் வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடையவில்லை” என்றார்.
வாக்கர் இறுதியில் வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடியதாகவும் அவரின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவர் தங்களுக்கு ஆபத்தை விளைவிப்பார என எண்ணி சுட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.