மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியது ராஜபக்ச அரசு – அதிபர் மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது தற்போது பலமிழந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ராஜபக்ச அரசாங்கம் தவறியது என இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது தற்போது பலமிழந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டி இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது தேசிய பாதுகாப்பு என்ற ஒரு கொள்கையை முன்வைத்து ராஜபக்சவினர் தேர்தலில் களமிறங்கினர்.

அந்த தேசிய பாதுகாப்பு கொள்கையானது தற்போது என்னவாயிற்று என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தற்போதைய கோத்தபாய ராஜபக்ஷ அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.கடந்த 2019 காலகட்டங்களில் மக்களிடம் ராஜபக்சவினர் கொடுத்த வாக்குறுதி தான் நாட்டின் பாதுகாப்பு இவற்றை பலப்படுத்தும் வகையிலும் மக்களுக்கு எந்த ஒரு துன்பமும் நேராத வகையிலும் ஆட்சி நடத்தப்படும் என்பது.

இருந்த போதிலும் தற்போது வரை 3 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் உயர் பாதுகாப்பு வளையங்களாக கருதப்படும் இலங்கை அதிபர் மாளிகை, அதிபரின் வீடுகள் என சாதாரண ஒரு மனிதன் கூட நுழைய முடியாத பகுதியாக அது இருக்கிறது.

இருந்தபோதிலும் இந்த ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் எவ்வாறு நுழைந்து தாக்கினார்கள் என மைத்திரிபால சிறிசேன என கேள்வி எழுப்பி இருக்கிறார். தேசிய பாதுகாப்பு என்ற கொள்கையின் கீழ் ஆட்சி அமைத்துவிட்டு, நாட்டின் தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையில், ஆட்சியை பிடித்து வைத்திருப்பதாக  அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படும் வரையிலும் தேசிய பாதுகாப்பு என்ற ஒன்றுக்கு அவசியம் ஏற்படவில்லை என அரசியலில் விமர்சகர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர் .

பொதுவாக 2015 முதல் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை ஓரளவாவது அமைதி பாதையில், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து நல்லாட்சி என்ற பெயரில் அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்தது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்  இலங்கையில் இருக்கும் அரசியல் கட்சிகளிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, குழப்பங்களை விளைவித்து அடுத்து நடைபெற இருந்த தேர்தலுக்கு இலகுவாக வழி வகுத்தது எனலாம். குறிப்பாக 2020 இல் நடைபெற வேண்டிய இலங்கையின் அரசின் அதிபர் தேர்தலானது, 2019 நவம்பர் மாதம் நடைபெற்றது.

ஏனென்றால் அங்கு நடைபெற்ற ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் மீது  பல்வேறு குற்றச்சாட்டுகள்,  புகார்கள் சுமத்தப்பட்டன.அதனால் முன்கூட்டியே இலங்கையில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருந்ததால், ராஜபக்ச குடும்பத்தினர் முக்கியமாக இலங்கையின் தேசிய பாதுகாப்பு கொள்கையை கையில் எடுத்து பிரச்சாரம் செய்ய வியூகங்களை வகுத்தனர் .

அந்த வியூகங்கள் அப்போது இருந்த நிலைமையில் மக்களின் மனதில் வேரூன்றி பதிந்தது. அதாவது 2009 யுத்த காலத்தில் பிரச்சினையிலிருந்து இலங்கையை மீட்ட ராஜபக்சவினர், இந்த ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்  சம்பவங்களை அடுத்து , நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் என கருதிய  பெரும்பான்மை சிங்கள மக்களும் அங்குள்ள பிற இனத்தைச் சேர்ந்த மக்களும்  வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்சவினர், இலங்கையை  அபிவிருத்தி என்ற பெயரில் எவ்வாறு சூறையாடுவது, கூறு போட்டு விற்பது போன்ற விஷயங்களில் தான் கவனம் செலுத்தி வந்ததாக அந்நாட்டு அரசியல்வாதிகளே குற்றஞ்சாட்டி உள்ளனர்.மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க  ஆட்சியில் கூட இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை.

 அப்போதும் பொருட்களின் விலை ஏற்றம் அதிகரித்து தான் இருந்தது. இருந்தாலும் அதை சமாளித்து மக்களை ஒருங்கிணைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால்  ராஜபக்சவினர் ஆட்சிக்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல், அபிவிருத்தி என்ற பெயரில் வளங்களை சூறையாடியதும், உலக நாடுகளிடம் ஏற்கனவே வாங்கியிருந்த கடன் மத்திய கிழக்கு நாடுகளை பகைத்துக் கொண்டதும்  பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.இந்நிலையில் மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க தெரிந்த ராஜபக்சவினருக்கு  ஆட்சியை சீராகக் கொண்டு போக தெரியவில்லை என்பதே அங்குள்ள அரசியல்வாதிகளின், எதிர்கட்சிகளின் கருத்தாக இருக்கிறது .

மக்களிடம் இனத்துவேசத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி, ஏனைய அரசியல்வாதிகளின் பெயர்களை மக்கள் மத்தியில் தரம் தாழ்த்தி பேசி,  நாட்டை ஆட்சி செய்ய தெரியாதவர்கள் என மக்கள் மனதில் பதிய வைத்து, தங்களை மட்டும் மீட்பராக காட்டிக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்சவினர் ஏன் தங்களின் உறுதிமொழியான தேசிய பாதுகாப்பு கொள்கையை நிறைவேற்றினார்களா? என மைத்திரிபால சிறிசேன தற்போது கேட்டிருக்கிறார் .

உண்மையாகவே ராஜபக்ச குடும்பத்தினர் காலம் காலமாக இலங்கையின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்த ஒரு பொருளாதார நெருக்கடியை அவர்களால் அவர்களால் சமாளிக்க முடியாமல் போனதோ என பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு தான் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தார். அப்போதும் நாடு கடனில் தான் இருந்தது, முதல் முறை அதிபரான மைத்திரிபால கூட   ஓரளவு சீராக ஆட்சியை‌கொண்டு நடத்தினார்.

ஆட்சி அதிகார ஆசையில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற கோதபாய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போதும் வெளிநாடுகளில் இருந்து கடன்களை வாங்கும் நோக்கத்திலேயே இருப்பதாக இலங்கையின் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. இலங்கையின் அரசியல் சார்ந்த முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து ,உள்நாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணாமல், மீண்டும் மீண்டும் உலக நாடுகளையே நம்பி இருப்பது,  சுமூகமான முறையில் பொருளாதார நெருக்கடியை  சரி செய்யுமா என்பது அரசியல் வல்லுனர்களின்   கேள்வியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *