சாப்பாடு தண்ணீ இல்லாமலா? வெண்ணிலவே பாட்டு நாஸ்டாலிஜிக் இதுதான்.. மனம் திறந்த பிரபுதேவா!

பிரபுதேவா நடித்துள்ள மை  டியர் பூதம் படம் ஜுலை  15ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். பிரபுதேவா நடன அமைப்பாளர் மட்டுமின்றி நடிகரும்கூட. அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, தமிழ்,  ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். சற்று இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா நடித்துள்ள மை  டியர் பூதம் படம் ஜுலை  15ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக பல்வேறு யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியளித்து வருகிறார். அதன்படி கலாட்டா யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் கொடுத்தபோது பல்வேறு நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

  • வெண்ணிலவே வெண்ணிலவே, ரோமியோ ஆட்டம் போட்டால், சிக்கு புக்கு ரயிலே இந்த மூனு பாடல்களில் எது மிகவும்  பிடித்த பாடல்?

மூன்று பாடலுமே மிகவும் பிடிக்கும். ஆனால் மூன்றில் அதிகமாக வெண்ணிலவே வெண்ணிலவே பாடல்தான் பிடிக்கும்.

  • வெண்ணிலவே பாடல் குறித்த நாஸ்டாலிஜிக் மொமண்ட் பற்றி கூற வேண்டுமென்றால் என்ன சொல்வீர்க்ள்?  அது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயமாக இருக்கலாம், வேறு ஏதேனும் நினைவுகளாகவும் இருக்கலாம்? என்ன சொல்வீர்கள்?

அந்த ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டூடியோவில்தான் எடுத்தோம். இப்போதுபோல அப்போது ஏசி அறையெல்லாம் இல்லை. தமிழ், இந்தி இரண்டு மொழிகளிலும் ஷூட்டிங் எடுத்தோம். அந்த பாடல் சிறப்பாக வந்ததென்றால் அதற்கு காரணம் இயக்குநர்தான். அந்த இடம், நடனம் என அனைத்தையுமே பார்த்து பார்த்து செய்தார். அடுத்து, கஜோல் கண்ணாலே செய்த எக்ஸ்பிரஷன்ஸ், ரஹ்மானின் இசை, கேமராமேன் வேணுவின் அசத்தலான வேலை. அப்போது சாதாரணமாக தெரிந்தாலும் இப்போது அது பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது. 

  • வாழ்க்கையில் கடந்து வந்த பாதையில் நிறைய கற்றுக்கொண்டு இருப்பீர்கள். அதில் எதை அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டுமென்று  நினைக்கிறீர்கள்?

வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் எதையும் சொல்லித்தர வேண்டுமென்றுஇல்லை. அவர்களுக்கு எல்லாமே தெரியும். அவர்களாவே பார்த்து தெரிந்துகொள்வார்கள்.

  • சென்னையில அடிக்கடி போய் சாப்பிடுற இடம் எதும் இருக்கா?

அப்படியெல்லாம் எதுவுமில்லை.நான் எங்குமே போனதில்லை.  நான் வீட்டில்தான் இருப்பேன். இப்போது மும்பைக்கு போனால்கூட அங்குள்ள வீட்டில்தான் இருப்பேன். எங்கையும் வெளியே போகமாட்டேன்.

  • சாப்பாடு, தண்ணீர் மறந்து ஒருநாள் முழுக்க டான்ஸ் பிராக்டீஷ் செஞ்சு இருக்கீங்களா? 

அப்படியெல்லாம் எதுவுமில்லை. எனக்கு ரொம்ப பசிக்கும்.நான் டயட் இருப்பேன். ஆனால் சாப்பிடாமல் இருக்க மாட்டேன். சாப்பிடாமல் ஆடமுடியாது. தலை வலிக்கும். டான்ஸ்சர்ஸ் எல்லாம் நல்லா சாப்பிடுவாங்க. சாப்பிடலைன்னா எனர்ஜி இருக்காது. ஆடவே முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *