“முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டும்” – அரசியல் தலைவர்கள் வாழ்த்து
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணமடைய சீமான், டிடிவி, சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வாழத்துகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்துகள்:
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்
சீமான்:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழு உடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்:
கொரோனா தொற்றின் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிகளைத் தொடர வாழ்த்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை:
தமிழ்நாடு முதலமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து, மக்கள் சேவைக்கு விரைந்து வர பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சரத்குமார்:
கொரோனா தொற்று பாதிப்பால், தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், விரைவில் பூரண நலம் பெற்று, வழக்கமான ஆட்சி பணிகளை தொடர வேண்டுமென சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.