இணையவழியில் நிர்வாண வீடியோக்கள்! – தன்பாலின ஈர்ப்பாளர் போலீஸுக்கு நேர்ந்த சோகம்..!

ராஜஸ்தானில் சில்மிஷ போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் நகர் மாவட்டத்தில் உள்ள கின்ஸ்வார் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் அதிகாரி கோபால கிருஷ்ணன்.

ராஜஸ்தானில் சில்மிஷ போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் நகர் மாவட்டத்தில் உள்ள கின்ஸ்வார் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் அதிகாரி கோபால கிருஷ்ணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பிளாக் மெயில் செய்வதாக புகார் கூறினார்.

டெகானா காவல் நிலையத்தில் பணியில் உள்ளார் கான்ஸ்டபிள் பிரதீப் சவுத்ரி. இந்த காவல் நிலையமும் நகர் மாவட்டத்தில் தான் உள்ளது. அங்குள்ள காவலர் பிரதீப் சவுத்ரி, கிருஷ்ணாவின் நிர்வாண வீடியோக்களை வைத்து அவரை மிரட்டி வந்துள்ளார். அந்த வீடியோக்களை வெளியிட்டுவிடுவதாகக் கூறி கிருஷ்ணாவிடமிருந்து அவர் 2.2 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார். அதேபோல் ரூ.5 லட்சம் பணமும் ஒரு சொகுசு காரும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அது குறித்து சிறப்பு காவல் அதிகாரி கிருஷ்ணா மாவட்ட கண்காணிப்பாளர் ராம் மூர்த்தி ஜோஷி கூறியுள்ளார்.

இந்தப் புகாரைப் பெற்ற எஸ்பி காவல் சிறப்பு ஆய்வாளர் கிருஷ்ணா மற்றும் கான்ஸ்டபிள் சவுத்ரி என இருவரையுமே சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இருவருமே 8 மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளம் மூலம் பழகியுள்ளனர். இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்கள். அவ்வாறாக அவர் பழக்கத்தின் போது கிருஷ்ணா அனுப்பிய நிர்வாண வீடியோவை டவுன்லோடு செய்து கொண சவுத்ரி அவரை மிரட்டிப் பணம் பறித்துள்ளார்.

விதவிதமான சைபர் குற்றங்கள்:

இணையம் எத்தனை வரமோ. அத்தனை சாபமும் கூட. பாலியல் குற்றங்கள், பண மோசடி என இணைய வழியில் ஏமாற வாய்ப்புகள் அதிகம். அதனாலேயே புதிய எண்ணில் இருந்து வரும் எந்த லிங்கை கிளிக் செய்யக்கூடாது. அதுமட்டுமின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் செயலிகள் மூலமாக மட்டுமே கடன் பெற வேண்டும். அதைக்காட்டிலும் வங்கியில் நேரடியாக சென்று அவர்களின் விதிமுறை மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடனை பெற்றுக் கொண்டாள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது. இதனை மீறுபவர்கள் மட்டுமே இவ்வாறு சம்பவங்கள் நடைபெறும். இதுபோன்று மிரட்டல் வந்தால் உடனே 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.

ஆன்லைனில் மோசடியாக பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ஏடிஎம் கார்டு விவரங்களை பெற்று வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக பறிக்கும் சம்பவங்கள் அறங்கேறின.

இதுதொடர்பாக மக்கள் மத்தியில் சைபர் கிரைம் போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக அத்தகைய குற்றங்கள் சற்று குறைந்தது. இதற்கிடையே, வெளிநாட்டில் இருந்து பல கோடி பரிசு கிடைத்துள்ளது என்றும் குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்யும் சம்பவங்களும் நடைபெற தொடங்கியுள்ளது. அதிக சம்பளத்தில் வேலை தருகிறோம் என்றும், வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்றும், ஏமாற்றுகின்றனர். பணமோ, பாலியல் இச்சையோ இணையத்தில் அத்துமீறும் போது ஆபத்துகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *