‛குழந்தை பெத்துக்க, 8 ஆண்டு போராட்டம்… அடுத்தடுத்து கருக்கலைப்பு …’ -அமலா பால் பதிவால் அதிர்ந்த ரசிகர்கள்!
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய முந்தைய கர்ப்பங்கள் காரணமாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தான் இறந்திருக்கக்கூடும் என அமலா பால் பகிர்ந்துள்ள பதிவு அவரது ரசிகர்களை சில நிமிடம், அதிர வைத்தது.
கருப்பை பிரச்னை காரணமாக நான்கு முறை கருக்கலைப்பு செய்ய சேர்ந்து என்றும், அதன் பிறகு அதிக ஆபத்து நிறைந்த ட்ரிப்ளெட் குழந்தைகளை வயிற்றில் சுமந்து பல போராட்டங்களைக் கடந்து அவர்களில் ஒரு குழந்தையை மட்டும் பெற்றெடுத்த கதையை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார் அமலாபால். அவ்வளவு தான், அவரது இன்ஸ்டா பக்கம் தீப்பற்றி எரிந்தது.
மேலும், கருக்கலைப்பு செய்திருக்காவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய முந்தைய கர்ப்பங்கள் காரணமாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தான் இறந்திருக்கக்கூடும் என்றும் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். அமலா பாலின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அமலா பால், தமிழில் ’சிந்து சமவெளி’ படத்தில் அறிமுகமாகி ’மைனா’ படம் மூலம் பெரும் பிரபலமடைந்தார். தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால், ’தெய்வத் திருமகள்’ படத்தில் இயக்குநர் விஜய்யுடன் காதலில் விழுந்து அவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக 2017ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்ற நிலையில், அமலா பால் தொடர்ந்து திரைத்துறையில் இயங்கி வருகிறார்.
இந்நிலையில், தான் அமலாபால் இந்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். வெளிநாட்டவரான எமி பெல்லா மூர் என்பவரது பதிவை அமலா பால் ரீடேக் செய்துள்ளதை கவனிக்காமல், அமலா பால் தன் வாழ்வில் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளாரா என அவரது ரசிகர்கள் இந்தப் பதிவில் கவலை தெரிவித்து வருகின்றனர்.
விபரம் புரிந்த சிலர், இது அமலாவின் வாழ்வில் நடந்தது அல்ல, அவர் வேறு ஒரு பெண்ணின் கதையை பகிர்கிறார் என , பதில் பகுதியில் தெரிவித்தும், புரியாத சிலர், இது அமலா பாலுக்கு நடந்ததாகவே வருத்தமாக தங்கள் அனுதாபத்தை பகிர்ந்து வருகிறார். ’குட்டி ஸ்டோரி’, ’பிட்ட கதலு’ ஆகிய ஆந்தாலஜி படங்களில் அமலா பால் நடித்த நிலையில், அவரது நடிப்பில் விரைவில் மலையாளத்தில் ’ஆடுஜீவிதம்’ எனும் படம் வெளியாக உள்ளது. அதில் அமலா பால் பிஸியாக உள்ளார்.