ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் தந்த விஜய்… ’வாரிசு’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய் இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவரது வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்

நடிகர் விஜய்யின் 66ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு வாரிசு எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன்  first look போஸ்டர் நேற்று (ஜூன்.22) மாலை வெளியானது.  தற்போது இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

வம்சி இயக்கும் இப்படத்தில் ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பிரபலங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், இப்படம் ஒரு ’பான் இந்தியா’ படமாக இருக்கும் எனப் பலரும் தெரிவித்து வந்தனர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

விஜய் – பிரகாஷ்ராஜ் கூட்டணி

படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரது தீவிர ரசிகையும் தெலுங்கு திரையுலக பிரபல நடிகையுமான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ’கில்லி’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இப்படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை படம் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *