டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்..!
வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டம்.
டி.டி.வி. தினகரனோடு ஓ. பன்னீர்செல்வதிற்கு ரகசிய உறவு இருப்பதாகவும், அவரது குடும்பத்தின் நலனில் மட்டும் ஓ.பி.எஸ். கவனம் செலுத்துவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை கே.கே. நகரில் உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில், வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. அதிமுக கட்சிக்கு பாதுகாவலராகவும், வலுவான தலைமையாகவும் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.” என்று தெரிவித்தார்.