இந்த படத்தை 50 நொடிகள் பார்த்தால் இதிலுள்ள நிறங்கள் எல்லாம் வித்தியாசமாக தெரியும்!
இந்த ஒளியியல் மாயை வைத்து நமது மூளையின் திறனையும் அறிந்து கொள்ள முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதை உளவியல் ரீதியான மருத்துவத்திற்கும் மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இணையத்தில் மிகவும் வைரலாக கூடிய விஷயங்களில் ஒன்று இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். இவை நமது மூளைக்கு வேலை தரும் வகையில் இருப்பதால் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது. நாம் பார்க்க கூடிய விஷயங்கள், பல நேரங்களில் வேறு சிலவற்றை போன்று தோன்றும், இந்த எண்ணத்தை இந்த ஆப்டிகல் இலுஷன் படங்கள் நமக்கு தருகின்றன.
இது சாதாரணமாக எல்லா வகையான விஷயங்களின் மீது நமக்கு ஏற்பட கூடிய ஒரு மாய தோற்றமாக கூட இருக்கலாம். மனிதர்கள் முதல் உயிரற்ற பொருட்கள் வரை இப்படி ஏராளமானவை இதில் அடங்கும். அதே போன்று தூரத்தில் இருந்து ஒரு விஷயத்தை பார்க்கும் போது நமது மூளைக்கு அது வேறு ஒன்று போன்று தோன்றும். இது போன்ற மாயை நமக்கு ஏற்படுத்த கூடிய தன்மை ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு உள்ளது. அந்த வகையில், நமது மூளையானது ஒன்றுடன் தொடர்புடைய மற்ற விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து அதற்கேற்ப செயல்படும். எப்படி இந்த அளவிற்கு மனித மூளை வேலை செய்கிறது என்பதை பற்றி, பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன்
இந்த ஒளியியல் மாயை வைத்து நமது மூளையின் திறனையும் அறிந்து கொள்ள முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதை உளவியல் ரீதியான மருத்துவத்திற்கும் மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் மறைந்துள்ள சில விஷயங்களை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை பார்ப்போம். இந்த படத்தில் உள்ள நான்கு வகையான நிறங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை நீங்கள் 50 நொடிகள் உற்று பார்த்தால் உங்களுக்கு ஒரு மாயாஜாலம் நடக்கும்.
இந்த மனதைக் கவரும் ஆப்டிகல் மாயை படத்தை டிக் டாக் தளத்தில் ஒருவர் பதிவேற்றி உள்ளார். இந்த ஆப்டிகல் மாயை புதுவிதமாக இருப்பதால், இது இப்போது வைரலாகி வருகிறது. நீலம், பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு வண்ணங்களை இந்த படத்தில் நீங்கள் பார்க்கலாம். அதன்படி, இந்த படத்தின் மையத்தை உற்று நோக்கினால் ஒரு மாயமான விஷயத்தை நீங்கள் உணரலாம். இது உங்களை நிறக்குருடராக மாற்றும் தன்மை கொண்ட படமாகும். இந்த படத்தின் மையத்தை உற்றுப் பார்க்கும் போது கண்களை இமைக்காமல் இருக்க முயற்சிக்கவும். அப்போது தான் இந்த மாயாஜாலம் சரியாக வேலை செய்யும்.
இதில் உங்களுக்கு என்ன நடக்க போகிறது என்றே தெரியாத வண்ணம் குழப்பமாக இருக்கலாம். எனினும், நீங்கள் இதன் மையத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் இதிலுள்ள வண்ணங்கள் மாறும். ஆம், இந்த படத்தில் உள்ள நிறங்கள் இறுதியாக கருப்பு மற்றும் வெள்ளை நிறமாக மாறிவிடும். இது மிகவும் சுவாரஸ்யமான ஆப்டிகல் இலுஷன் புதிராக இருக்கும். இந்த படத்தை பார்த்து எப்படி இது சத்தியம் என யோசித்து பாருங்கள்.