மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ்- அனிருத் கூட்டணி.. மாஸாக வெளியான “தாய்கிழவி” பாடல்..!

நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆடுகளம், மாப்பிள்ளை ஆகிய படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளியில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார். 4வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
‘தங்கமகன்’ படத்திற்கு கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் தனுஷூம் அனிருத்தும் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்தத் திரைப்படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த நிலையில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி படத்தின் முதல் பாடலான தாய் கிழவி பாடல் ஜூன் 24 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
மேலும் இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வைரலானது.அனிருத் இசையில் இந்தப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். தாய்கிழவி பாடல் தற்போது வெளியாகி இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.