“ஒற்றைத் தலைமை”.. பக்கா வியூகத்துடன் எடப்பாடி பழனிச்சாமி?.. சம்மதிப்பாரா ஓபிஎஸ்? கையில் லகான்!…
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமையை உருவாக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.
அதிமுகவில் கடந்த 5 நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. கிரீன்வேஸ் சாலையில் நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களும் ஓபிஎஸ் வீட்டுக்கும் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கும் மாறி மாறி சென்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து தனக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஒற்றைத் தலைமை குறித்து விருப்பம் ஏதும் இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் ஒற்றை தலைமை தற்போதைய சூழலுக்கு சரிபட்டு வராது என்றும் இரட்டை தலைமைதான் நீடிக்க வேண்டும் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி மேலும் தன்னை ஓரங்கட்ட நினைத்தால் அது நடக்காது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் தொண்டர்களின் ஆதரவு தனக்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. நேற்று நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.
ஆதரவாளர்கள் நேற்று முதல் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சென்னை வீட்டில் ஆலோசனை நடத்தினார். தலைமை குழு நிர்வாக கூட்டத்திற்கு பிறகு ஜெயக்குமார் எடப்பாடியை சந்தித்தார். அது போல் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனும் ஆலோசனை நடத்தியிருந்தனர்.
செங்கோட்டையன் இவர்களில் செங்கோட்டையன், தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் வீட்டுக்கும் சென்று அங்கும் அவருடன் ஆலோசனை நடத்தியிருந்தனர். வரும் 23 ஆம் தேதி ஒற்றைத் தலைமை குறித்து தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வியூகம் வகுத்துள்ளார்களாம்.
ஒற்றைத் தலைமை ஒற்றைத் தலைமை வேண்டும். அதுவும் தனக்கு கீழ் கட்சியை கொண்டு வர வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார் என தெரிகிறது. இதற்காக மூத்த நிர்வாகிகளை ஓபிஎஸ் வீட்டுக்கு தூது அனுப்பி அவரை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறாராம்.
ஓபிஎஸ் விட்டுக் கொடுப்பாரா இதற்காக எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் நள்ளிரவையும் தாண்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. வரும் 23 ஆம் தேதிக்குள் ஒற்றைத் தலைமைக்கு ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்த முயற்சிக்கப்படும் என தெரிகிறது. ஆனால் இதுவரை விட்டுக் கொடுத்தது போதும் இனி வேண்டாம் என்றே ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கருத்தாகவுள்ளது. இதுவே ஓபிஎஸ்ஸின் கருத்தாகவும் உள்ளது. ஒரு வேளை ஒற்றைத் தலைமை தனித்தீர்மானம் நிறைவேற்றினால் அதை முறியடிக்கவும் லகானை கையில் எடுக்கவும் ஓபிஎஸ் முயற்சித்துள்ளாராம்.