Dinesh karthik : ‘நாயகன் மீண்டும் வரான்’.. பரபர எடிட்!! ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் தினேஷ் கார்த்திக்!
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிரடி அரைசதம் அடித்த தினேஷ் கார்த்திக்கிற்கு டுவிட்டரில் பாராட்டு மழை குவிந்து வருகிறது.
இந்தியா – தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதிய நான்காவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 169 ரன்களை குவித்த இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
81 ரன்களுக்கு 4 விக்கெட்டுடன் தவித்து வந்த இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 55 ரன்கள் விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடி தனது முதல் அரைசதத்தை டி20 போட்டியில் அடித்த தினேஷ் கார்த்திக்கிற்கு டுவிட்டரில் பாராட்டு மழை குவிந்து வருகிறது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற நாயகன் மீண்டும் வரான் பாடலை தினேஷ் கார்த்திக்குக்கு எடிட் செய்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
ரசிகர் ஒருவர் தினேஷ் கார்த்திக் சார் மாஸ் காட்றீங்க.. என்று பாராட்டியுள்ளார்.
நீண்டகாலமாக இந்திய அணியில் இடம்கிடைக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் தற்போது முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் பினிஷர் வேலையை கனகச்சிதமாக செய்து வருவதால் இந்திய ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். வரும் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியில் தினேஷ்கார்த்திக் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.