பழனிசாமிக்கு அடுத்த சிக்கல் ரெடி…! டெல்லி சென்றதும் தேர்தல் ஆணையத்தை நாடிய ஓ.பி.எஸ்..!

ஜூலை 11-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்து அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11-ந் தேதி கூட உள்ள நிலையில், டெல்லியில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வரும் ஜூலை 11-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். தன்னுடைய கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது என அறிவிக்க வலியுறுத்தி முறையீடு செய்துள்ளார். 

டெல்லியில் இன்று பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் வேட்புமனுத்தாக்கலுக்காக டெல்லி சென்றதாக நேற்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *