“கிறிஸ்தவர்கள்” + பாதிரியார்களுக்கு பாஜக குறி.. ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை…

சென்னை: கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விசிகவின் திருமாவளவன் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி இருக்கிறார்.. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது… இந்த நிலையில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும்பணியில் தேசிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன… ஜனாதிபதி தேர்தலில் மாநில கட்சிகளின் பங்கு அதிக அளவில் தேவை என்பதால், மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் ஆரம்பமாகி உள்ளன.

திருமாவளவன் வேண்டுகோள் இப்படிப்பட்ட சூழலில், கடந்த ஒரு மாதமாகவே, திருமாவளவன் முக்கிய கோரிக்கை ஒன்றினை முன்வைத்து வருகிறார்.. அதன்படி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதற்கு திருமா சொல்லும் காரணம், “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த யாருமே ஜனாதிபதியாக இருந்ததில்லை.

இஸ்லாமிய மக்கள் இந்திய மக்கள் தொகையில் 3வது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட கிறிஸ்தவ சமூகத்துக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதி நிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அவர்களது மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை.. இதற்கு முன்பு, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், தலித்துகள் முதலானோர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளனர்.

கிறிஸ்தவர்கள் ஆனால் இதுவரை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.. இந்த பாஜகவின் 8 வருட ஆட்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றிக் கிறிஸ்தவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவரப்பட்டு எவ்வித ஆதாரமும் இன்றி கிறிஸ்தவர்கள் பழி வாங்கப்படுகின்றனர். மேலும் சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களால் கிறிஸ்தவர்கள், குறிப்பாக பாதிரியார்கள் திட்டமிட்ட தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

கிறிஸ்தவ சமுதாயம் – மாண்பு இந்த நேரத்தில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும்.. இது பாதுகாப்பற்ற நிலையில் எந்நேரமும் அச்சத்தில் உழலும் கிறிஸ்தவ மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாகவும் அமையும் என்பதே திருமாவளவனின் வாதம்.

முதல்வர் ஸ்டாலின் இப்போதும் இதே முழக்கத்தை முன்வைத்துள்ளார்.. இந்தியாவின் கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமூகம் ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது என்று கூறியுள்ள திருமாவளவன், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கிறிஸ்தவர் ஒருவரை களம் இறக்க வேண்டும் என்றும், இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவிப்பார் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.. இதையடுத்து, இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் என்ன முடிவெடுப்பார் என்ற ஆர்வமும் பெருகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *